நான் ஒரு அப்பாவி - ராம்குமார் ஜாமீன் மனு

By செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாருக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக் கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ராம்குமார் சார்பில் தாக்கல் செய் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட் டார். இந்த வழக்கில் பி.ராம் குமார்(24) மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ராம் குமாரை ஜூலை 1-ம் தேதி கைது செய்துள்ளனர். கைது செய்யப் படும்போது போலீஸாருடன் வந் தவர்கள் ராம்குமாரை அடித்தும், அவரது கழுத்தை பிளேடால் கீறியும் உள்ளனர்.

போலீஸார் உண்மைக் குற்ற வாளியை மறைத்துவிட்டு அப்பாவி கிராமத்து இளைஞரான ராம்குமாரை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்த மில்லை. ராம்குமாரின் நிரந்தர முகவரியே நெல்லை மீனாட்சிபுரம் தான். அவருக்கு ஜாமீன் அளித் தால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். எனவே ராம்குமா ருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்