ஆன்லைன் பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

By செய்திப்பிரிவு

சென்னையைச் சேர்ந்த காங்கேஷ் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்டு கூறுகையில், ‘பணமதிப்பு நீக்கத் துக்கு பிறகு வாடிக்கையாளர்கள் செய்த ஆன் லைன் பண பரிவர்த்த னைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பரிவர்த்தனைக் கட்டணமாக வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டுள்ளன. இவற் றிற்கு தடை விதித்தும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பின்பு இதுபோன்று பிடித்தம் செய்வது தவறு. அவ்வாறு செய்யப்பட்ட அனைத்து தொகைகளையும் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தற் போது அனைத்துவிதமான ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக் கும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகின்றன. தற்போது பணமில்லா பரிவர்த் தனை அதிகரித்துள்ள நிலை யில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டால் பரிவர்த்தனைக் கட்டணம் பிடிப்பது ரத்து செய்யப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்