17 அரசு மருத்துவமனைகளில் இயக்கப்படாமல் உள்ள ரத்த மூலக்கூறு இயந்திரங்கள்: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ஆர்.ராஜ செல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த மூலக்கூறுகள் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இயந்திரம் ரத்தத்தில் இருந்து சிகப்பு அணுக்கள், பிளேட்லெட்டு களை பிரித்தெடுக்க பயன்படுத் தப்படுகிறது.

தானம் பெறப்பட்ட ரத்தத்தில் இருந்து 6 மணி நேரத்தில் மூலக் கூறுகளை பிரிக்க வேண்டும். மூலக்கூறுகள் பிரிக்கப்படாத ரத்தத்தை 35 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மைனஸ் 40 டிகிரி செல்சியஸில் மூலக் கூறுகள் பிரித்தெடுக்கப்பட்ட ரத்தத்தை ஒரு ஆண்டு வரையும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப் பட்ட ரத்தத்தை 5 ஆண்டுகள் வரையும் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் உட்பட 17 மாவட்ட அரசு மருத்துவமனை களில் தலா ரூ.75 லட்சம் மதிப்பில் ரத்த மூலக்கூறுகளை பிரித் தெடுக்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டன. இருப்பினும் இந்த இயந் திரங்கள் இதுவரை செயல்பாட் டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த இயந்திரங்களைப் பயன்படுத்த மத்திய, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மை செயல ரிடம் இருந்து அனுமதி கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. ரத்த மூலக்கூறுகளை பிரித்தெடுக்கும் இயந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறைக்கு ஜூலை 11-ல் மனு அனுப்பினேன். ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே ரத்த மூலக் கூறுகளை பிரித்தெடுக்கும் 17 இயந்திரங்களை இயக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங் கிய அமர்வு முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகு மணி வாதிட்டார். விசாரணைக் குப் பிறகு மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர் களுக்கு உத்தரவிட்டு, விசா ரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 mins ago

தமிழகம்

33 mins ago

சுற்றுலா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்