மாணவர் போராட்டத்துக்கு அனுமதி: காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - புதிய மனுவை ஏற்க அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட இடங் களில் ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து நெடுவாசல் பகுதி மக்கள் கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே கடந்த மார்ச் 2-ம் தேதி ஒருநாள் உண்ணா விரதப் போராட்டம் நடத்த மாணவர்கள் சார்பில் காவல் துறை உதவி ஆணையரிடம் பிப்ரவரி 24- ம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னையை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘‘நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் மார்ச் 2-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால், வேறொரு தேதி யில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். போராட்டத்துக்கு அனுமதி கோரி மாணவர்கள் புதிய மனுவை காவல்துறையிடம் வழங்க வேண்டும். அதற்கு மாநகர காவல் ஆணையர் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

6 mins ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்