மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளி யிட்டு இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் பழங்குடி இனத்தவர் களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள் ளாட்சித் தேர்தல் அறிவிப் பாணைக்கு தடை விதித்தது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 30-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண் டும் எனவும் உத்தரவிட்டது.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய் தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராம்மோகன் ராவ், எஸ்.எம்.சுப் பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ‘‘வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர் தலை நடத்தி முடிக்க வேண்டும்’’ என காலக்கெடு விதித்தனர்.

இந்நிலையில், ‘உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் புதிய பிரதிநிதிகள் பதவியேற்க வேண்டும் என பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது. அதன்படி, ஏப்ரல் 24-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டும்’ என மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பாடம் ஏ.நாராயணன், தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாகவும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசா ரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக் கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், ‘‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வரு கின்றன. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம். எனவே, தேர்தலை நடத்து வதற்கான காலக்கெடுவை நீட் டிக்க வேண்டும்’ என கோரப்பட்டு இருந்தது.

மேலும், மாநில தேர்தல் ஆணை யம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘உள்ளாட்சி தேர்தலை மே 14-க்குள் நடத்த வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது கேலிக் கூத்தாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துக்கொண்டே இருக்க முடியாது. ஏற்கெனவே மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண் டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக் கையை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்தனர்.

மேலும், மே 14-க்குள் தேர் தலை நடத்தி முடிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த முதன்மை அமர்வு, ‘‘வேண்டுமென்றால் மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதானே’’ எனக்கூறி வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்