ஜெயலலிதா படத்துடன் மாணவர்களுக்கு டைரி

By செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய மாணவர் கையேடு (டைரி) வழங்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் டைரி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வகுப்புகள் தொடங்கிய நாளன்று 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு டைரி வழங்கப்பட்டது.

இந்த டைரியில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பள்ளி காலஅட்டவணை, காலை வழிபாட்டு முறை, உடல் நல பராமரிப்பு, செஸ் போட்டிகளுக்கான செயல் திட்டம், உடல் கல்வியின் பயன்கள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், மாதவாரியாக வேலைநாட்கள், தினசரி குறிப்பு, விடுப்பு

விவரம், தேர்வுக்கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர் சுயவிவரங்களை (பயோ-டேட்டா) குறிப்பிடும் வகையிலான தகவல்களும் உள்ளன.

டைரியின் முகப்பு அட்டையில் தமிழக அரசு சின்னத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பின்புற அட்டையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை குறிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இலவச நோட்டுகளிலும் மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச நோட்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஓடிடி களம்

32 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்