வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஊதியம் வழங்குவதில் பாதிப்பு

By எல்.சீனிவாசன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் ரூ.7,200 கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கி சேவை முடங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

வங்கித் துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். வங்கிப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. வாராக்கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன்களை திருப்பி செலுத் தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழி யர் சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டம் குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:

பெருகி வரும் வாராக் கடனை வசூலிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை. சாதாரண மக்க ளின் சேமிப்பு மூலமாக திரட்டப்படும் டெபாசிட்டை, பெரும் முதலாளி களுக்கு கடனாக அளிக்கின்றனர். ஆனால், இந்த பெரும் முதலாளி களிடம் இருந்து கடன்கள் திரும்ப பெறாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே துரித நடவடிக்கை எடுத்து வாராக்கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று அனைத்து வங்கி தொழிற் சங்கங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் அதற்கு மாறாக அரசாங்கம் வாராக்கடன்களை சலுகையாக அறிவித்து ரத்து செய்து வருகின்றன.

ரூ.110 லட்சம் கோடி சேமிப்பு புழக்கத்தில் இருக்கும் வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. அவற்றை அரசு கண்காணிப்புடன் நடத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதில் நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. அதனை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து நாடு முழு வதும் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிப் படைந்தது.

இந்த வேலைநிறுத்தத் தில் நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 65 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். அதேபோல், நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளும், தமிழகத்தில் 9 ஆயிரம் வங்கிக் கிளைகளும் மூடப்பட்டன. மேலும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் ரூ.7,200 கோடி மதிப்பிலான 12 ஆயிரம் காசோலை பரிவர்த் தனைகள் முடங்கியுள்ளன என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஏடிஎம் சேவையும் பாதிப்படைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

வாழ்வியல்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்