முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படுகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாராட்டு

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் சிறப்பாக செயல்படு கிறார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு, முதல்வர் என்ற காரணத் துக்காக மதிக்கப்பட வேண்டிய வர். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்கூட முன்னே சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காருக்கு வழிவிட்டு முதல்வருக்கு உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறார்.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் தனக்கு இணையாக மேடையில் அமர வைக்காமல், கும்பலோடு கும்பலாக அமர வைத்து அவ மானப்படுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் உட்பட பல்வேறு விஷயங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் சிறப் பாக செயல்பட்டுள்ளார். சென்னை குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தண் ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததுபோல, கேரள முதல் வரையும் நேரில் சந்தித்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை களை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண் டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீ ஸார் வன்முறையை கடைபிடித் ததை வன்மையாகக் கண்டிக் கிறேன். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.

பிராணிகள் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் அமைப்பு என்ற காரணத்துக்காகத்தான் பீட்டா வுக்கு காங்கிரஸ் அனுமதி அளித் தது. ஆனால் பீட்டா தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால், அப்போதே பீட்டாவை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தத் தொடங்கிவிட்டது.

பன்னாட்டு குளிர்பானங்களை ஆந்திராவில் சில இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத் துள்ளது. sஅத்தகைய குளிர்பானங் கள் தடை செய்யப்படுவது மக்களுக்கு நல்லது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்