நடுக்குப்பம் மீனவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள்

By செய்திப்பிரிவு

சென்னை கலவரத்தில் பாதிக்கப் பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் கடைசி நாளில் சென்னையில் வன்முறை வெடித் தது. ஐஸ் அவுஸ், திருவல்லிக் கேணி, நடுக் குப்பம் உள்ளிட்ட இடங்களில் மோதல் ஏற்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை அமைச் சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பார்வை யிட்டு, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடுக்குப்பம் மீனவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஐஸ் பெட்டி, அரிசி, வேட்டி, சேலை உட்பட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், நிருபர்களிடம் விஜய காந்த் கூறும்போது, ‘‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்யக் கூடாது. உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்வின்போது தேமுதிக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்