தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

By செய்திப்பிரிவு

‘தமிழகத்துக்கு முழுநேர நிரந்தர ஆளுநராகவே வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை கூடுதல் நியமனமாக கருதக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள் நிரந்தர ஆளுநரை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பொறுப்பு ஆளுநராக மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நியமிக்கபட்டார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு முழுநேர நிரந்தர ஆளுநரை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்,‘‘பொறுப்பு ஆளுநர் சில நாட்களே தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்து பணிகளைக் கவனிப்பதால், ஆளுநர் கவனிக்க வேண்டிய உயர் கல்வி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஸ்தம்பித்துப் போய் உள்ளன. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக திறமையான ஆட்சி நிர்வாகம் நடைபெறவில்லை. சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி, மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட முக்கிய பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. எனவே தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ‘‘ஆளுநர் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஆளுநர் நியமனம் தொடர்பான நடை முறைகள் அனைத்தும் ரகசிய மானவை. அதை வெளிப்படை யாக சொல்ல முடியாது. அரசிய லமைப்புச் சட்டத்தில் ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங் களின் ஆளுநராக பதவி வகிப்ப தற்கும் வழிவகை உள்ளது. அதன் படிதான் மகாராஷ்டிரா ஆளுநரான வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கும், முழுநேர ஆளுநராகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை தமிழகத்திற்கான கூடுதல் பொறுப்பாக கருதக் கூடாது’’ என வாதிட்டார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிரந்தர ஆளுநரை நியமிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்