தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது.

மாணவிகளே அதிகம்..

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.9%. இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

முக்கிய புள்ளி விவரம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிந்தது. தமிழகத்தில் பள்ளிகள் மூலமாக 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 (8,33,682) பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 3,88,935, மாணவிகள் 4,44,747. இவர்களில் பொதுக் கல்வி பிரிவில் பயின்றவர்கள் 3,50,012 மாணவர்கள், 4,20,460 மாணவிகள் ஆவர். தொழிற்கல்வி பிரிவில் பயின்றவர்கள் 38,923 மாணவர்கள், 24,287 மாணவிகள் ஆவர்.

பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்:

இயற்பியல் - 5

வேதியியல் - 1,703

உயிரியல் - 775

தாவரவியல் - 20

விலங்கியல் - 10

கணிதம் - 3361

கணினி அறிவியல் - 303

வணிகவியல் - 3084

கணக்குப்பதிவியல் - 4341

பிசினஸ் கணிதம் - 1072

வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

32 mins ago

வாழ்வியல்

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்