உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெட்டப்பட்ட மரங்களின் பெயர்களோடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களின் பெயர்களோடு, அது தொடர்பாக ஏப்.27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காரல்மார்க்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பல அரிய வகை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ கடந்த ஏப்ரல் 18-ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் அபூர்வ வகை மரங்கள் என்னென்ன உள்ளது? அவைகளின் பெயர் என்ன? மொத்தம் எத்தனை மரங்கள் உள்ளன? என்ற எந்தத் தகவலும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால்தான் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகின்றன என அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாகக் கூறப்படும் மரங்களின் பெயர்களோடு, விரிவான அறிக்கையை மதுரை உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் (நிர்வாகம்) வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்