போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

வாரிசு சான்றிதழைப் போலியாக தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(52) என்பவரை நாடினார்.

ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் சந்திரகாந்த்துக்கு வாரிசு சான்றிதழை கொடுத்திருக்கிறார் ஆனந்தன். அந்த வாரிசு சான்றி தழைக் கொண்டு, சொத்து விஷய மாக எம்.ஜி.ஆர். நகர் தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்திருந்தார் சந்திரகாந்த். வாரிசு சான்றிதழைப் பார்த்த தாசில்தார் மகாராஜன், தனது கையெழுத்தையும், அலு வலக சீலையும் போலியாக போடப்பட்டிருப்பதை கண்டுபிடித் தார். உடனே சந்திரகாந்த்தை அழைத்து, ‘‘வாரிசு சான்றிதழை யாரிடம் வாங்கினீர்கள்’’ என்று அவர் விவரம் கேட்டபோது, அவர் ஆனந்தனைக் கைகாட்டினார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் தாசில்தார் மகாராஜன் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி ஆனந்தனையும், அவரது நண்பர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் சேர்ந்து வாரிசு, சாதி சான்றிதழ் உட்பட பல அரசு சான்றி தழ்களைப் போலியாக தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய ரப்பர் ஸ்டாம்புகள், காகிதங்கள், லென்ஸ் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதான இருவரும் நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்