பேசும் படங்கள்: வேணும் வேணும் ஜல்லிக்கட்டு வேணும்!

By செய்திப்பிரிவு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க, கட்டுக்கோப்பான போராட்டத்தால் தமிழகம் புதிய கவுரவம் பெற்று தரணியில் தலைநிமிர்ந்துள்ளது. கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரையில் குடும்பம் குடும்பமாய் திரண்டு வந்து சாலைகளில் உரிமை முழக்கமிட்டவர்களின் எழுச்சிகரமான போராட்டக் காட்சிகளின் சிறப்புப் படத் தொகுப்பு.

ஜல்லிக்கட்டு கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் ருத்ரதாண்டவத்தை நினைவூட்டுகிறதோ என எண்ணும்படி புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில் சிவபெருமான் வேடமணிந்து நடனமாடும் நாடகக் கலைஞர்.படம்: எம்.சாம்ராஜ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் சென்னை மெரினா கடற்கரையில் இசைக்கேற்ப உற்சாக நடனமிடும் சிறார்கள்.படம்: சி.பார்த்திபன்

ஜல்லிக்கட்டின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பேருந்து கூரையின் மேல் ஏறி நின்று மெரினா கடற்கரை நோக்கி பயணமாகும் இளைஞர்கள்.படம்: கே.வி.சீனிவாசன்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பெருகிவரும் ஆதரவுக்கு அடையாளச் சின்னமாக மெரினா கடற்கரை காட்சியளிக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வாகனங்களும் அணிவகுத்து வந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு போராட்டம் நிதானமாக நடைபெறுகிறது.படம்: ம.பிரபு

திருச்சியில் நேற்று நடந்த போராட்டத்தில், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்தியில் எழுதப்பட்ட வாசகங்களுடன் தந்தையுடன் பங்கேற்ற சிறுமி. படம்: ஜி.ஞானவேல்முருகன். போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சிறுவனை உற்சாகமாக தூக்கி மகிழ்ந்த இளைஞர் பட்டாளம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டம் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், கூட்டம் அதிகரித்துள்ளதே தவிர இம்மியளவும் குறைந்தபாடில்லை. படம்: ஜி.மூர்த்தி

ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி, மதுரை தமுக்கம் மைதானம் முன் அலைகடலென திரண்ட மக்கள். படங்கள்: எஸ். ஜேம்ஸ்

பெங்களூரு காரைக்கால் ரயில் சேலம் முள்ளுவாடி கேட் அருகே இரண்டாவது நாளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பகலில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்த பயணிகள் ரயில் நேற்று இரவு வரை விடுவிக்கப்படவில்லை. படம்: எஸ். குரு பிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்