இலங்கைத் தமிழர் பிரச்சினை: இன்று மனித உரிமைகள் கருத்தரங்கம்

By செய்திப்பிரிவு

இலங்கையில் தமிழர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்த கருத்தரங்கம் சென்னையில் திங்கள்கிழமை நடக்கிறது.

பாஜகவின் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தற்போது பாஜகவுடன் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். அது மட்டுமின்றி, பாஜக தலைவர்கள் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மனித உரிமைகள் கருத்தரங்கம் என்ற பெயரிலான நிகழ்ச்சி சென்னை எழும்பூரிலுள்ள இம்பீரியல் ஓட்டல் வளாகத்திலுள்ள சிராஜ் அரங்கில் , திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் பாதிப்புக்குள்ளானது குறித்தும், கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் தாக்குதல்கள் போன்றவை குறித்தும் இந்தக் கருத்தரங்கில் பேசவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

17 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்