இந்தியை திணிக்கும் மறைமுக வழியே நீட் தேர்வு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இந்தியை திணிப்பதற்கான மறைமுக வழியே நீட் தேர்வு என திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் மாவட்ட செயலர் கரு.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலை வகித்தனர்.

இக்கருத்தரங்கில், க.பொன் முடி எம்எல்ஏ பேசியது: இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை திணிப்பதற்கான மறைமுக வழி நீட் தேர்வு. நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. இந்தி திணிப்புக்காக சிபிஎஸ்இ பாடத்திட்டம் திமுகவால் தமிழகத்தில் எதிர்க்கப்பட்டது. தமிழக மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

அதனால்தான் மாணவர்கள் மீது திமுக அக்கறை கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என மாநிலம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். ஆனால், தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சியாளர்களுக்கு நீட் தேர்வு பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு ஆட்சியை தக்கவைக்கவும், சின்னத்தை பெற மட்டும்தான் தெரியும். நீட் தேர்வு பற்றி பேசினால் பிரதமர் மோடியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் கூட ஆட்சியாளர்கள் பேசாமல் இருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது என எதிர்த்தார். முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் மூலம் பலர் உயர்கல்வி பெற வழிவகுத்தவர். மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்து டாக்டர்களான தமிழர்கள், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். அப்படி இருக்கையில் ஏன் மத்திய அரசு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து மத்திய பாடத்திட்டத்துக்கு மாற்றம் செய்வதற்கு காரணம் என்ன. எதற்கு இந்த ஒரே கல்வி, ஒரே மொழி கோஷம்? என்றார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் கேள்விகளுக்கு பொன்முடி பதிலளித்துப் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்