தமிழை முதல் பாடமாக்க கோரி தமிழாசிரியர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத் தமிழாசிரியர் கழகத்தினர் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்ப் பாடத்தை கடைசி பாடமாக்கிய அரசாணை எண் 266-யை திருத்தம் செய்து, தாய்மொழியான தமிழ்ப்பாடத்தை முதல் பாடமாக்க வேண்டும் என் பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகத் தமிழாசிரியர் கழகத்தினர், சேப் பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கழகத்தின் மாநிலத் தலைவர் சா.மருதவாணன் தலைமை வகித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ் பாடத்தை முதல் பாட மாக்க வேண்டும். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டு களுக்கும் மேலாகிவிட்ட தால், புதிய பாடத்திட்டக் குழு அமைத்து 2017-2018-ம் ஆண்டில் புதிய பாடங்களை நடைமுறைப் படுத்த வேண்டும்.

12-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்துக்கு அகமதிப்பீடாக 20 மதிப்பெண்கள் வழங்கப் படுவதை போல மாணவர்களின் அடிப்படை மொழித்திறன்களான பேசுதல், கேட்டல், எழுதுதல் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வளர்க்கவும், முழுமையாக மதிப்பீடு செய்வதற்கும் 10-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்துக்கும் 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவதை போலவே 10-ம் வகுப்பு மாண வர்களுக்கான தேர்வுகளும், காலை 9 மணிக்கு பதிலாக, காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.

போராட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலர் சு.நாகேந்திரன், மாநில சிறப்புத் தலைவர் ஆ.ஆறு முகனார், மாநில மதிப்பியல் தலைவர் கி.த.பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்