வாழ்வியல் ஒழுக்க நெறிகளை போதிக்கும் தாலாட்டுப் பாடல்கள் அழிந்து வரும் அவலம்: ஆவணப்படுத்தி ஒலிபரப்புகிறது மதுரை வானொலி

நாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டுப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். ‘தால்’ என்பது நாவைக் குறிக்கும். குழந்தையை உறங்க வைக்க நாவை ஆட்டி ‘ரா ரா ரா ரா, லு லு லு லு’ என்று ராகம் இசைப்பதால் தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது.

தாலாட்டுப் பாடலின் தொடக் கத்தில் இடம்பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று வகைப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் தாலாட்டுப் பாடல் கள் அனைத்து சமயம், மதம், ஜாதி சார்ந்த மக்களிடம் வழக்கத்தில் உள்ளது என்பதே இப்பாடல் வடி வத்தின் சிறப்பாகும். தாலாட்டுப் பாடலை குழந்தையின் தாய் மட்டும் அல்லாமல் பாட்டி, அத்தை, மூத்த சகோதரி போன்ற உறவினர்களா லும் பாடப்படுவதாகும். பெண்கள் வாய்மொழி இலக்கியமாகத் திகழும் தாலாட்டினை ஆண்கள் பாடுவது அரிதாகும்.

19-ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் இருந்து சிறுசிறு தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இதனால் நாட் டார் பாடல் வகைகளில் தாலாட்டுப் பாடல்களில் எழுத்து இலக்கியத்தின் தாக்கம் மிகுதியாகப் பெற்ற இலக்கியமாக திகழ்கிறது.

தாலாட்டுப் பாடலின் இயல்புகள்

குழந்தைகளை உறங்க வைப்ப தற்காக தாலாட்டுப் பாடல் பாடப் பட்டாலும் வாழ்வியல் ஒழுக்க நெறிகளையும், முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், உறவு முறைகளையும் குழந்தை மனதில் ஆழமாக விதைக்கும் வலிமை கொண்டவை தாலாட்டுப் பாடல்கள். குழந்தையைப் பற்றிய தாயின் எதிர்பார்ப்புகளும், கனவு கள், தாய் மாமன் புகழ் இதில் அதிகம் காணப்படுவது உண்டு. அழுத குழந்தையை சிரிக்க வைக்க, விளையாட்டு காண்பிக்க, பேசுவதற்கு, நா பயிற்சி அளிக்க என குழந்தைகள் வளரும் ஒவ் வொரு சூழலுக்கு ஏற்ப தனித் தன்மையுடன் தாலாட்டுப் பாடல்கள் பாடப்படுவது உண்டு.

பாரம்பரியமாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டுப் பாடல்கள் இன்றைய தலைமுறைகளின் சினிமா மோகத்தினால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இந் நிலையில் அகில இந்திய வானொலியின் மதுரை நிலையம் தாலாட்டுப் பாடல்களை ஆவணப் படுத்தும் அளப்பறிய பணியை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மதுரை வானொலி யின் நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா ராஜாராம் கூறியதாவது: அகில இந்திய வானொலியின் மதுரை நிலையத்துக்குட்பட்ட ஒலிபரப்பு எல்லைக்குள் இருக்கும் 6 மாவட்டங்களில் பாடப்படும் பாரம் பரிய பாடல்களின் ஒலிப்பதிவுகளை ஆவணத் தொகுப்பாக்கி பாதுகாத் திடும் முனைப்போடு களம் இறங்கி யது மதுரை வானாலி.

முதற்கட்டமாக அழிவு நிலை யில் இருக்கும் தாலாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்த ஆயத்தமாகி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் பல்வேறு சமுதாய மக்களை அணுகி 113 பாடல்கள் பதிவு செய்யப்பட்டது.

பெரும்பாலும் 55 வயதை கடந்த மூத்த தலைமுறையினர் மட்டுமே தாலாட்டுப் பாடல்களை பாடினார்கள். இரண்டாம் தலை முறைக்கு (அம்மா, அப்பா) தாலாட்டுப் பாடல்களை பாடத் தெரியவில்லை. தற்போது மூன்றாம் தலைமுறையினருக்கு (பேரன், பேத்தி) தாலாட்டுப் பாடல்களைப் பாடி உறங்க வைப்பது வழக்கத்தில் இல்லை எனவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

பதிவு செய்யப்பட்ட தாலாட்டுப் பாடல்களை நேயர்களுக்காக தற் போது தொகுத்து வழங்க உள்ளோம். மதுரை வானொலியில்.செவ்வாய், வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு “ஊரகக் கலை யரங்கம்” நிகழ்ச்சியில் தாலாட்டுப் பாடல்கள் ஒளிபரப்பப்படும். மதுரை வானொலியின் ஒலிபரப்பு நிர்வாகி கார்த்திகை தீபன் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார் என்றார்.

ஆவணப்படுத்தும் பணிக்காக மதுரை வானொலியை வாழ்த்தும் சமூக ஆர்வலர்கள், தாலாட்டு வழக்கொழிந்து போவதை தடுக்க தற்போதைய தலைமுறை தம்பதி களும் குழந்தைகளுக்கான பாடல் களைப் பாட வேண்டும்.

இதனால் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் தாலாட்டுப் பாடல் தனித்துவ மாக விளங்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

சவித்ரா ராஜாராம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்