அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் காலதாமதம் செய்வது சட்ட விரோதம்: நவநீத கிருஷ்ணன் எம்.பி. பேட்டி

By செய்திப்பிரிவு

அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமில்லை. இது சட்டவிரோதமாகும் என்றுஅதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூவத்தூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது..

''தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இந்த நேரத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இருக்க வேண்டும். ஏதோ காரணங்களால் காலதாமதம் செய்யப்படுவது ஏன்?. இதனால், தமிழக மக்களுக்கு அநீதி ஏற்படுகிறது. ஆளுநர் நல்ல திறமையான நிர்வாகி, அவர் பல பதவிகளை வகித்தவர். அவர் சட்ட வல்லுநர் கூட, என்ன பிரச்சினை என்று கூர்ந்து ஆய்வு செய்யக் கூடியவர். இதற்கு ஏன் காலதாமதம் செய்கிறார் என தெரியவில்லை.

இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு அநீதி இழைக்காமல் காலதாமதம் செய்யாமல், உடனடியாக எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து முதல்வராக பதவி பிரமாணம் செய்து அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலமைப்பு சட்டப்படி இப்படி காலதாமதம் செய்வது நியாயமில்லை. இது சட்ட விரோதமாகும். இதற்கிடையே ஆளுநருக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம்'' என்று எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்