நடுரோட்டில் குடும்பத்தை சரமாரி தாக்கிய போலீஸார்: செங்கத்தில் மறியல்; போலீஸார் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்க வாடி கிராமத்தில் வசிப்பவர் ராஜா. இவரது மனைவி உஷா, மகன் சூர்யா. இவர்கள் 3 பேரும், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்கு நேற்று மதியம் வந்துள்ளனர். பணம் குறைவாக இருந்ததால், நகை வாங்க முடியவில்லை. இதனால், கடையில் இருந்து வெளியே வந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கம் காவல் நிலைய போலீ ஸார் நம்மாழ்வார், முருகன், விஜய குமார் ஆகியோர், அவர்களிடம் விசாரித்து உள்ளனர். அதற்கு அவர் கள், எங்கள் குடும்பப் பிரச்சினை என்பதால் நீங்கள் தலையிட வேண் டாம் என்று கூறியுள்ளனர். அதில், அவர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த 3 போலீஸாரும், ராஜா குடும்பத் தினரை லத்தியால் பயங்கரமாக தாக்கி உள்ளனர். அவர்களது தாக்கு தல் நீண்ட நேரம் நீடித்துள்ளது. மேலும், அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மக்களையும் அடித்து விரட்டி யுள்ளனர்.

இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், ராஜா குடும்பத்தி னரை காவல் நிலையத்துக்கு போலீ ஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செங்கம் நகர மக்கள் கூறும்போது, “குற்றச் செயல் களில் ஈடுபடுபவர்களிடம் போலீ ஸார் மென்மையாக நடந்து கொள் கின்றனர். பாமர மக்களிடம் அதி காரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்று காட்டு மிராண்டித் தனமாக தாக்கி அவர்களை அவமதிப்புடன் அவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்துகின் றனர்.

முரட்டுத் தனமாக நடந்து கொண்ட அந்த 3 போலீஸாரில் 2 பேர் சீருடை அணிந்திருந்தனர். மற்றொருவர் (விஜயகுமார்) சாதாரண உடையில் இருந்துள்ளார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் என்பதால் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடக் கூடாது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றனர்.

3 போலீஸார் இடமாற்றம்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி விசாரணை நடத்தி உள்ளார். இதையடுத்து, பொது இடத்தில் கண்மூடித்தனமாக தாக்கிய 3 போலீஸாரும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் ஷாஜித்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுஇடத்தில் இப்படி நடந்த போலீஸாரை கண்டித்து, செங்கம் - பெங்களூரு சாலையில் பொதுமக்கள் சுமார் 1 மணிநேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். இத னால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்