ஸ்மிருதி இரானி மீது வளையல் வீசிய இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் அம்ரேலியில் நேற்று மாலை பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றினார்.

அப்போது, கேத்தன் கஸவாலா (20) என்ற இளைஞர், திடீரென அமைச்சர் மீது விளையல்கள் வீசினார். தூரத்தில் இருந்து வீசியதால் அமைச்சர் மீது வளையல்கள் விழவில்லை. அவரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் அம்ரேலி மாவட்டம் மோடா பண்டாரியா கிராமத்தைச் சேர்ந்த வர் என்பது தெரிய வந்தது என்று அம்ரேலி போலீஸ் எஸ்பி ஜகதீஷ் படேல் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்படி கோஷமிட்டு கேத்தன் வளையல்கள் வீசினார்’’ என்று காங்கிரஸார் கூறினர். ஆனால், அவர் காங்கிரஸ்காரர் இல்லை. வந்தே மாதரம் என்றுதான் கோஷ மிட்டார்.

மேலும், தன் மீது வளையல் வீசட்டும். அதை அவருடைய மனைவிக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்