திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே கருத்துக் கணிப்புகள்: துரைமுருகன் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே தவறான கருத்துக் கணிப்புகள் வெளி யாகின்றன என்று திமுக முன்னாள் அமைச் சர் துரைமுருகன் பேசினார்.

சேலம் மெய்யனூர் பகுதியில் நேற்று நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் துரை முருகன் பேசிய தாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றும். அதற்கு அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மனதில் பதிவு செய்யும் பணியில் திமுக-வினர் ஈடுபட வேண்டும். தொலைக் காட்சி ஒன்றில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் சிறப்பாக செயல்பட்டதாக அதிமுக-வுக்கு 37 சதவீதம் பேர் வாக்களித்து இருப்ப தாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவித் துள்ளனர். அதிமுக ஆட்சி மீது பெண் களுக்கு அதிருப்தி ஏற்பட முக்கியக் காரணமே, ரேஷன் கடைகள் தான். இப்படி ஒரு மோசமான சூழ்நிலை இருக்கும் போது, அதிமுக-வுக்கு சாதகமாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. திமுக-வின் வெற்றியை தடுக்கவே தவறான கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.

கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் கண்ணியம் மிக்க சட்டப்பேரவை கேலிக்குரியதாகி விட்டது. 5 ஆண்டு ஆட்சியில் கேள்வி நேரத்தில் முதல்வர் பதில்கூட சொல்ல வில்லை.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலின்போது அரசு ஊழியர்கள் பிரச்சினையைத் தீர்க்க குழு அமைப்போம் என்று சொன்ன அதிமுக குழு அமைத்ததா? இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்