மதுரை அருகே லாரி - கார் மோதல் மக்கள் பாடகர் திருவுடையான் பலி

By செய்திப்பிரிவு

மதுரை அருகே நான்குவழிச் சாலை யில் லாரி மீது கார் மோதியதில் பிரபல மக்கள் பாடகர் திரு வுடையான்(48) உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் கோமதியார்புரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் திருவுடையான். இவரது மனைவி சங்கர ஆவுடை யம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

திருவுடையான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நெல்லை மாவட்டச் செயலராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்கப் பாடகராகவும் இருந்தார்.

இவர் சேலத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற கட்சிக் கூட் டத்தில் பங்கேற்றுவிட்டு சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திருவுடையா னின் தம்பி தண்டபாணியும்(45) உடன் வந்தார்.

காரை சங்கரன்கோவில் ராம சாமிபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி யன்(38) ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி பங்களா அருகே நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வந்தபோது நான்குவழிச் சாலையில் இடதுபுறம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த கோர விபத்தில் பாடகர் திருவுடையான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி தண்டபாணி, ஓட்டுநர் தங்கபாண்டியன் ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

சினிமாவிலும் பாடி உள்ளார்

விசைத்தறி தொழிலாளியான திருவுடையான் கலை மீது ஆர்வம் கொண்டவர். ஆரம்பத் தில் தட்டிபோர்டு எழுதிவந்தார். பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து பணியாற்றினார். தொழிலாளர் களைப் பற்றிய கிராமியப் பாடல் களை எழுதி, அவரே இசைய மைத்து பாடத் தொடங்கினார். பெரும்பாலான கம்யூனிஸ்ட் மாநாடு, கட்சி நிகழ்ச்சிகளில் இவரது பாடலுடன் விழா தொடங்கும். அந்த வகையில் சமூகம் மீதும், கம்யூனிஸ்ட் இயக்கம் மீதும் ஆர்வம் கொண்டு பல்வேறு பாடல் களை பாடியுள்ளார். தானே மிருதங்கம், தபேலா வாசித்து கிராமியப் பாடல்களை பாடி வந் தார்.

சினிமாவிலும் பாடியுள்ளார். கமல்ஹாசன் நடித்த ‘விருமாண்டி’, அண்மையில் வெளியான ‘மத யானை கூட்டம்’, ‘மயில்’ திரைப் படங்களில் பாடியுள்ளார். இயக்குநர் தங்கர் பச்சானின் படத்தில் டைட் டில் பாடலும் பாடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

மேலும்