நீதித்துறையை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: வழக்கறிஞர்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

நீதித்துறையை இழிவுபடுத்தும் சக்திகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில மாநாடு, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தலைமை வகித்தார். இதில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.குலசேகரன், ஏ.கே.ராஜன், ஆர்.வெங்கட் ராமன், பாமக நிறுவனரும், வழக்கறிஞர் சமூகநீதி பேரவை யின் நிறுவனரு மான ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி., பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணிக ளுக்கான அதிகாரிகளை தேர்ந் தெடுக்க தனி ஆணையம் அமைக் கப்பட்டிருப்பதைப் போன்று, நீதிபதிகளை தேர்ந்தெடுக்க தேசிய நீதிப்பணி தேர்வாணையத்தை அமைப்பதுதான் சரியானதாக இருக்கும்.

ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள சிலர், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

இத்தகைய செயல்களை வழக் கறிஞர்கள் சமூகநீதி பேரவை கண்டிக்கிறது. நீதித் துறையை இழிவுபடுத்தும் வகையில் செயல் படும்சக்திகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்