செங்கல் சூளைகளின் எரிபொருளுக்காக நூறு ரூபாய்க்கு அழிக்கப்படும் பனை மரங்கள்

By எஸ்.நீலவண்ணன்

தமிழகத்தின் மாநில மரமான பனை, இன்று செங்கல் சூளைகளின் எரி பொருளுக்காக வேகமாக அழிக்கப் பட்டு வருகின்றன. பனை (Palmyra Palm), புல் இனத்தைச் சேர்ந்த தாவர பேரினம் ஆகும். உள்நாட்டு பொருளாதாரத்தில் பனை மரங்களுக்கு என தனி இடம் உண்டு.

1970-ம் ஆண்டுகளில் நடத்தப் பட்ட ஆய்வின்படி தமிழகத்தில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பனை மரங் களின் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்திருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருப் பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்திருக்கிறது. 1970-ம் ஆண்டில் இருந்து 40 ஆண்டு களில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அதில் பாதியளவு மரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பனை மரங்கள் பயிரிடப்படாமல், இயற்கையில் தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இவை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டு கள் வரை எடுக்கும். பனையின் வயது மனிதனின் சராசரி வயதை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுதொடர்பாக வனத்துறையி னர் கூறியதாவது: வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வரு கின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரி பொருளாகவும் பயன்படுத்தப்படு கின்றன. இதற்காக ரூ.100-க்கு பனை மரங்கள் வாங்கப்படுகின்றன என்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “பனையை பூலோக கற்பகத்தரு என குறிப்பிடுகிறார்கள். அக்காலத்தில் பனை ஓலைகளே எழுதுவதற்கு பயன்பட்டு வந்தன. பொதுவாக பனை, மழை நீரை உள்வாங்கி சுமார் 40 அடிக்கும் கீழே செலுத்தும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.

பனை மரத்தில் இருந்து ஆண் டொன்றுக்கு, பதனீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, நாட்டு சர்க்கரை 16 கிலோ, தும்பு 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ வரை கிடைக்கும். இம்மரத்துக்கு இடி, மின்னலை ஈர்த்து தன்னுள் கிரகிக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுவதால், இவற்றை இயற்கை இடிதாங்கியாக மக்கள் கருதுகின்றனர். எனவே பனை மரங்களை வெட்டுவதை தடை செய்ய வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில், ’சந்தனம், தேக்கு மரங்களுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டிய வகையாக பனை மரத்தை அறிவித்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால்தான் அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். பனை மரம் வளர்ப்பதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்