கணக்கெடுப்பு பணி முடிந்தது: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அரசு வழக்கறிஞர்கள் விரைவில் நீக்கம்

By கி.மகாராஜன்

நீதிமன்றங்களில் பணிபுரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அரசு வழக்கறிஞர்கள் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. விரைவில் இவர்கள் நீக்கப்பட்டு அந்த இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் உயர் நீதிமன்றம், மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் ஆளும் கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

அரசு வழக்கறிஞர் பதவி செல்வாக்கான பதவியாகும். இவர்கள் அரசு பொதுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றனர். இவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது.

இது தவிர வழக்கு தொடர் புடைய துறை மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனி கட்டணம் பெறுவதும் உண்டு. இதனால் அரசு வழக்கறிஞர் பதவியை பெற ஆளும் கட்சி வழக்கறிஞர்களிடம் பலத்த போட்டி நிலவும். தற்போது தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வருபவர்கள் 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வம், ம.நடராஜன், அதிமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகளின் சிபாரிசின்பேரில் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளின் சிபாரிசின் பேரிலும் சிலர் அரசு வழக்கறிஞர்களாக அப்போது நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் 5 ஆண்டு பணிக்காலம் முடிவுற்ற நிலையில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. பழைய அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் முதல்வராக இருந்த ஜெய லலிதாவுக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பழைய அரசு வழக்கறிஞர்களே பதவியில் தொடர்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 74 பேர் உள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தலைமையில் 41 அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர். இது தவிர மாநிலத்திலுள்ள 32 மாவட்ட நீதிமன்றங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளால் அதிமுக இரண்டாக பிளவுபட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலை மையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீ்ர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செய ல்பட்டு வருகிறது. ஆட்சியிலும், கட்சியிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனை த்து துறைகளிலும் தனது ஆதர வாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் அரசு வழக்கறிஞர்கள் பதவியில் தொட ர்வதால் அரசு வழக்குகளை ரகசியம் காப்பதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் அரசு வழக்கறிஞர்கள் பதவியிலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை நீக்கவும், அந்த இடத்தில் அதிமுக மாவட்ட செயலர்கள் பரிந்துரைக்கும் நபர்களையும், முதல்வரின் ஆதரவாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அரசு வழக்கறிஞர்கள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. உயர் நீதிமன்ற கிளையில் தற்போது பணியிலுள்ள அரசு வழக்கறிஞர்களில் 50 சதவீதம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்கள் என அடையாளம் காணப்பட்டு சட்டத்துறைக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

இப்பட்டியல் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், பிறர் சிபாரிசின் பேரில் நியமனம் செய்யப்பட்டவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களுக்கு புதியவர்கள் ஓரிரு நாளில் நியமனம் செய் யப்படுவர் என சட்டத்துறை வட் டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்