நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்: அமைச்சர் அன்பழகன்

By செய்திப்பிரிவு

நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். 3 லட்சத்து 70 ஆயிரம் பேரும் மருத்துவர் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நீட் தேர்வை பொறுத்தவரை, தமிழகத்தில் தேவையில்லை என்று கூறியுள்ளோம். மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் சென்று அமைச்சரை சந்தித்தோம்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தகுதியான சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் தான். மற்றும் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக்கல்லூரி வாய்ப்புக்காக தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். அதற்கான சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் வலியுறுத்தியுள்ளோம்'' என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்