தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் எதிர்பார்க்கப்பட்டதற்கு இரு தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கியது. வங்கதேசத்தைத் தாக்கிய மோரா புயலால் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (புதன்கிழமை) தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வங்கக்கடலில் மேலடுக்க சுழற்சி உருவாகியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்