திமுக செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்):

திமுக செயல்தலை வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி உடல்நலமில்லாமல் இருப்பதால் இந்த அருமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்திடும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைய வேண் டும் என தாய்க்கழகமான திராவிடர் கழகம் வாழ்த்துகிறது. தமிழகத்தில் ஆரோக்கியான அரசியல் வளர இது பயன்படும்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மாணவப் பருவம் முதல் அரசியலில் படிப்படியாக உழைத்து முன்னேறியுள்ள அவர் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):

திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பன்னெடுங்காலமாக கட்சியின் அடிமட்ட அளவில் இருந்து உழைத்து இன்று தலைவராக உயர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

1970-ல் அரசியலில் நுழைந்த மு.க.ஸ்டாலின் கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக செயல் தலைவராகியுள்ளார். ஏற்கெனவே, திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட செயல்பட்டு வரும் நிலயில் இந்த உயரிய பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்):

திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்கள், தொண்டர்கள் விருப்பப்படி அக்கட்சியின் செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை மறந்த அரசியல் நாகரிகத்துக்கு உதாரணமாக சட்டப்பேரவை யிலும், வெளியிலும் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடும் உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்திருக்கிறார். புதிய பொறுப்பில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்ட மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டது பாராட்டுக்குரியது. கருணாநிதி ஆசியோடு, தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் சிறப்பாக செயல்படுவார்.

எச்.வசந்தகுமார் (நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்):

50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து படிப்படியாக உயர்ந்து திமுக செயல் தலைவராக உயர்ந்திருப்பது உங்கள் உழைப்புக்கு கிடைத்த உயர்வு. உங்கள் உழைப்பும், செயல்பாடும் மக்கள் நலன் சார்ந்ததாகவும், தமிழக வளர்ச்சி சார்ந்ததாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் ஏ.நாராயணன், கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

25 mins ago

கல்வி

18 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

21 mins ago

ஓடிடி களம்

28 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்