10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் அறிவியல் பாடத்துக்கான செய் முறைத் தேர்வு 23-ம் தேதி தொடங் குகிறது. தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள தனித்தேர்வர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வுகள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களால் செப்டம்பர் 23, 24, 26 (வெள்ளி, சனி, திங்கள்) ஆகிய 3 நாட்கள் நடத்தப்படவுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கின்றனர். செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்று, தோல்வி அடைந்தவர்கள் தற்போது செய்முறைத் தேர்வில் மீண்டும் பங்கேற்க வேண்டும். இவர்கள் கருத்தியல் (தியரி) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும், செய்முறைத் தேர்வு எழுதிய பிறகு, மீண்டும் கண்டிப்பாக கருத்தியல் தேர்வு எழுத வேண்டும்.

செய்முறை பயிற்சி பெற்று, ஆனால் செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேரடி தனித்தேர்வர்களைப் பொறுத்தவரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வு எழுத முடியும். எனவே, இத்தேர்வர்கள் ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருந்தால் அவர்களும் மேற்கண்ட நாட்களில் செய்முறைத் தேர்வு எழுதிய பின்னர் செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுகளை எழுதலாம்.

அடுத்த ஆண்டு மார்ச் தேர்வுக்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் மாதம் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப் புக்கு பெயர்களை பதிவு செய்திருப் பார்கள்.

அவர்கள் தற்போதைய செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்