நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தினோம்: மாஃபா பாண்டியராஜன்

By செய்திப்பிரிவு

நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இன்று ஓபிஎஸ் அணியினர் ஆளுநரை சந்தித்தனர். அதற்குப் பிறகு இன்று மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கினார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறைக்கு எதிரானது என்பதையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 5 நாட்கள் தொகுதிக்கு சென்று வந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். மக்களிடம் கருத்துக்களை கேட்க எம்.எல்.ஏக்களை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.

ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்