தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 12 விவசாயிகள் பரிதாப மரணம்: வறட்சியில் பயிர்கள் கருகியதால் வேதனை

By செய்திப்பிரிவு

வறட்சியால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு மன வேதனையில் தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 12 விவசாயிகள் உயிரி ழந்தனர். ஏற்கெனவே தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.

நாகை மாவட்டம்

நாகப்பட்டினம் ஒன்றியம் ஆழியூர் அருகேயுள்ள கடம்பன் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் மனைவி சரோஜா(67). 2 ஏக்கரில் சம்பா பயிர்கள் கருகியதால் உளுந் தாவது விதைக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மழை பொய்த்ததால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

கீழ்வேளுர் ஒன்றியம் ஆணை மங்கலம் ஊராட்சி ஓர்குடியைச் சேர்ந்த கலியபெருமாள்(55). 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய் திருந்த சம்பா பயிர்கள் கருகியதைக் கண்டு, நேற்று காலை வயலிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருமருகல் ஒன்றியம் கூத்தபத்தார்தோப்பைச் சேர்ந்த திருமாவளவன்(47),தனது 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருந்த சம்பா பயிர்கள் கருகிய நிலையில், நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பங் குடியைச் சேர்ந்த வீரமணி(30), தனது 3 ஏக்கரில் சம்பா பயிரை பார்வையிட சென்றபோது மார டைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.

வேதாரண்யம் அருகே சின்ன தேவன்காட்டையைச் சேர்ந்தவர். கணபதி(75). இவர், தனது 3 ஏக்கர் நிலத்தில் பயிர்கள் கருகியதால் மனவேதனையில் நேற்று முன் தினம் மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதேபோல, பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த கோகுல வாசன்(72), 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகியதைப் பார்த்து மனமுடைந்ததில் நேற்று முன்தினம் மாலை மாரடைப்பால் இறந்தார்.

மயிலாடுதுறை அருகே சேமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (36). கருவாழக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்த மான ஆறுபாதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ததால் ரூ.1.30 லட்சம் கடனாளியானார். போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகத் தொடங்கியதால் மனமுடைந்த அவர், வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏகனி வயலைச் சேர்ந்தவர் ஞான சுந்தரம்(64). தனது 5 ஏக்கரில் சாகுபடி செய்த நெற்பயிர் கருகிய நிலையில், நேற்று முன் தினம் நெஞ்சு வலி ஏற்பட்டு வயல் வரப்பில் மயங்கி விழுந்தார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதேபோல, மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சி.மாரிமுத்து(55), தனது வயலில் விதைத்திருந்த கடலை நீரின்றிக் கருகிய அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பிரேமானந்தன்(37) என்ற விவசாயி, குத்தகை நிலத்தில் உளுந்து பயிரிட்டு இருந்தார். வறட்சியால் பயிர்கள் கருகிய நிலையில், நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பிரேமானந்தன் உயிரிழந்தார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே கணபதியேந்தலைச் சேர்ந்தவர் விவசாயி கருப் பையா(45). மனைவியின் நகை களை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் தனது 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். நீரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த அவர், நேற்று காலை வீட்டில் மயங்கி விழுந்தார். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம் அருகே படர்ந்தபுளியைச் சேர்ந்த பெ.சுப்பையா(44), தனது சகோதரர்களுடன் இணைந்து 30 ஏக்கரில் மக்காச்சோளம், 10 ஏக்கரில் உளுந்து, 10 ஏக்கரில் பாசிப்பயறு பயிரிட்டிருந்தார். மழையின்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

ஓடிடி களம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்