வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமியிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ் கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர் புடைய அனைத்து இடங் களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட் சுமி, சமக தலைவர் சரத் குமார், அவரது மனைவி ராதிகாவுக்கு சொந்த மான ராடன் மீடியா அலு வலகங்கள், அதிமுக முன் னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ் கரிடம் கடந்த 10-ம் தேதியும், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் 12-ம் தேதியும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினர்.

இந்நிலையில், அவர்க ளிடம் மேலும் விசாரணை நடத்த இன்று காலை 11 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத் தில் ஆஜராகும்படி அவர் களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. இருவரும் இன்று வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார்கள் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்