இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டம் மாநிலம் முழுவதும் செயலாக்கம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புறப் பள்ளி மாணவர் களும், நகர்ப்புறப் பள்ளி மாண வர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து பழகி தங்கள் திறன் க ளை வெளிப்படுத்தவும், உயர் கல்வி கற்கும்போது கூச்சமின்றி மற்றவர்களிடம் பழகும் திறனைப் பெறவும், கிராமங்களின் முக்கியத் துவத்தை நகர்ப்புற மாணவர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாகவும் இணைப் பள்ளிகள் என்ற கற்றல் முறையை நாகப்பட்டினம் மாவட் டத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி கல்வித் துறை நடைமுறைப்படுத் தியது.

இதன்படி, கிராமப்புறப் பள்ளி யைச் சேர்ந்த மாணவர்கள் நகர்ப்புறத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் பழகி, கல்வி பயின்றதுடன் திறன் மேம் படுத்தும் விளையாட்டுகளிலும் பங்கேற்று உற்சாகத்துடன் திரும் பினர். அதேபோல நகர்ப்புற பள்ளி மாணவர்கள், கிராமப்புறப் பள்ளிக்குச் சென்று மாணவர்க ளுடன் பழகி, கல்வி பயின்றனர்.

இந்த முறை குறித்து, கடந்த ஜூலை 9-ம் தேதி, ‘தி இந்து’வில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவை மாநில திட்ட இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் தொடங் கப்பட்ட இந்தப் புதிய கல்வி முறை யின் சிறப்பைக் கருதி, தற்போது மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்