கோவையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வங்கதேசத்தினர்: ஹெச்.ராஜா புதிய குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவையில் சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கோவையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் குடும்பத்தாரை பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீவிரவாதத்தின் புகலிடமாக தமிழகம் இருக்கிறது. இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட எந்த வழக்குகளிலும் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. தமிழக காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது.

எனவே இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், பாஜக சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம்.

விசாரணை வேண்டும்

சசிக்குமார் கொலை மற்றும் அதையொட்டி நடந்த வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

சசிக்குமார் இறுதி ஊர்வலத் தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கள்தான் வன்முறையில் ஈடு பட்டுள்ளனர். தமிழகத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்ய வேண்டும். கோவை வன்முறையில் 800-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

விளையாட்டு

13 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

35 mins ago

கருத்துப் பேழை

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்