மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன்: புதிய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உறுதி

By செய்திப்பிரிவு

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப் பாக செயல்படுவேன் என்று புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.கே.ராஜேந்திரன் தெரி வித்தார்.

தமிழக டிஜிபியாக இருந்த அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு திடீரென விருப்ப ஓய்வில் சென்றார். இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனை புதிய டிஜிபியாக (பொறுப்பு) அரசு நியமித்துள்ளது. அவர் நேற்று மதியம் காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று, தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தின் டிஜிபி என்பது மிகவும் பொறுப்பான மற்றும் சவாலான பதவி. மக்களுக்குச் சேவை செய்வதற்காக இந்தப் பொறுப்புக்கு என்னை நியமித்த முதல்வருக்கும், தமிழக அரசுக் கும் நன்றி. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவேன். எனது பொறுப்பைச் செவ்வனே செயல்படுத்துவேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மலையை சேர்ந்தவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஓலைபாடி கிராமத்தில் பிறந்த டி.கே.ராஜேந்திரன், அங்குள்ள அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர், வேலூரில் பட்டப்படிப்பை முடித்து விட்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு பிரிவு படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர், சரக டிஐஜி, தென் மண்டல ஐஜி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், சென்னை மாநகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் என காவல் துறையில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரும், சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் எஸ்.ஜார்ஜும் 1984-ம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்