மதுக்கரை யானை இறந்த விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற தலைமை நீதி பதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.மகா தேவன் ஆகியோர் நேற்று வழக்கு விசாரணையைத் தொடங் கியபோது, தீபகா என்ற வழக்கறி ஞர் ஆஜராகி கூறியதாவது:

கோவை மாவட்டம் மதுக் கரையில் காட்டு யானை பயிர் களை நாசம் செய்து வந்தது. மக்களும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அந்த யானையை வனத்துறையினர் தேடி வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. இதனிடையே அந்த யானையைத் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி எனது கட்சிக்காரர் பிரேமா வீரராகவன் தாக்கல் செய்த மனு முடித்துவைக்கப்பட்டது.

அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால் இறந்து விட்டது. யானையின் உடலை இந்திய விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்வதுடன், யானையின் இறப்பு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தர விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அங்கிருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறும்போது, “இறந்த யானையை கால்நடை மருத்து வர்கள் பிரேதப் பரிசோதனை செய்கின்றனர். அப்போது வீடியோ படமும் எடுக்கப்படுகிறது. அந்த அறிக்கையும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார். அரசு தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்