2016 பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திட்டவட்டம்

By எம்.சரவணன்

தமிழகத்தில் 2016-ல் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

திமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஆர்.கே.நகரில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை அதன் கூட்டணிக் கட்சி களான விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகி யவை ஆதரிக்கவில்லை. அது போன்ற நிலை இப்போது வந் தால் 2016 சட்டப்பேரவைத் தேர்த லில் கூட்டணி அமைவது பாதிக் கும் என்ற அச்சத்தால் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதை திமுக தவிர்த்திருக்கலாம்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று விடுதலை யாகியுள்ள ஜெயலலிதா, ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். எனவே, ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த இடைத் தேர்தலில் போட்டியிடு கிறோம்.

அதிமுகவுடன் இனி உறவு இல்லை என்பதை சொல்வதற்காக ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

4 ஆண்டுகால அதிமுக ஆட்சி யில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளையே அதிமுக அரசும் பின்பற்றி வருகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 100 கொலைகள் நடந்துள்ளன. ஜனநாயக ரீதியாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் அதிமுகவுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?

கூட்டணி முறிந்த பிறகுதானே அதிமுக அரசை எதிர்க்கிறீர்கள்?

அதிமுக அரசு பதவியேற்ற முதல் நாளே ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என அறிவித்தோம். சமச்சீர் கல் விக்கு தடை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அதிமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்க்கவே செய்தோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்துகொண்டது இல்லை.

திமுகவுடன் மார்க்சிஸ்ட் நெருங்கி வருவதுபோல தெரிகிறதே?

ஊழல் எதிர்ப்பு என்கிறபோது அதில் திமுக, அதிமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஊழல் கட்சிகள்தான். எனவே, திமுகவுடன் நெருங்கு வதாகக் கூறுவது தவறானது. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அப்படியெனில் 3-வது அணி அமைக்க போகிறீர்களா?

எங்கள் கொள்கைகளில் உறுதி யாக இருக்கிறோம். இவற்றுடன் உடன்படும் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவோம்.

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத கூட்டணி வெற்றி பெறுவது சாத்தி யமா?

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கொள்கை அடிப்படையில் கூட் டணி அமைந்தால் அந்த அணி முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் எந்தெந்த கட்சிகள் இணை யும் என்பதையெல்லாம் இப்போது கூறுவது சரியாக இருக்காது. திருமாவளவன் நடத்திய ‘தமிழகத் தில் கூட்டணி ஆட்சி’ என்ற கருத் தரங்கையும் இதற்கான முயற்சி யாகவே பார்க்கிறேன்.

தேர்தல் வந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி களை மக்கள் மறந்துவிடுகிறார்களே?

தேர்தலை வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளை எடை போடக் கூடாது. சர்வதேச, தேசிய அளவில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்கள், சாதி, மதம் உள்ளிட்ட அடையாள அரசியலால் சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நிலைமை வேகமாக மாறி வருகிறது. கம்யூனிஸ்ட் இயக் கங்களின் தேவையை இளைஞர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு பற்றி தொடர்ந்து பேசப்படுகிறது. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா?

ஒரே கட்சியாக இணைவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்ல, கட்சி சாராத கம்யூனிஸ சிந்தனை கொண்டவர்கள், ஆதரவாளர்கள், அறிவுஜீவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இன்றைய மோசமான நிலையை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கி றோம்.

ஓராண்டு மோடி ஆட்சியின் மோச மான அம்சங்களாக எதைப் பார்க்கி றீர்கள்?

நவீன பொருளாதாரக் கொள்கை களை காங்கிரஸைவிட பல மடங்கு வேகத்தில் அமல்படுத்தி வருகின் றனர். ரயில்வே உள்ளிட்ட அனைத் தையும் தனியார்மயமாக்க துடிக் கின்றனர். மறுபக்கத்தில் மதவாத செயல்பாடுகளை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்களும், எம்.பி.க் களும் சிறுபான்மையினரை அச் சுறுத்தும் வகையில் பேசி வரு கின்றனர். இதை பிரதமர் மோடி கண்டுகொள்வதே இல்லை.

லலித் மோடிக்கு சுஷ்மா செய்த உதவியை எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக அரசின் ஓராண்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என விளம்பரம் செய்தார் கள். ஆனால், ரூ. 1,800 கோடி ஐ.பி.எல். முறைகேட்டில் தேடப் படும் குற்றவாளியான லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் உதவியது அம் பலத்துக்கு வந்துள்ளது. இதனை வெறும் மனிதாபிமான உதவியாக மட்டும் பார்க்க முடியாது.

இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

33 mins ago

சினிமா

42 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

தமிழகம்

56 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்