காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டியதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்பி கார்வேந்தன், மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் முன் னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார். பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி நீர் பிரச்சினையில் கர் நாடகாவில் தமிழர்கள் மீது தாக்கு தல் நடத்துவதும், தமிழர்களின் வாகனங்களை எரிப்பதும் கண்டத் துக்குரியது. அதேபோல் தமிழகத் துக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் வந்த கன்னடர்களை தாக்கியது கேவலமானது.

காவிரி பிரச்சினையில் நிரந்த தீர்வு ஏற்படுவது குறித்து இரு மாநில அரசும் பேச வேண்டும். இதற்கு மத்திய அரசு உதவி செய் யும். அதிக மழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடும்போது அதைத் தேக்கி வைக்கவும் தமிழகம் தயாராக இருக்க வேண்டும்.

தற்போது தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் மத்திய அரசு தலையிட வேண்டியதில்லை. தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தற்போது அவசியம் எழவில்லை. சட்டம்- ஒழுங்கு மாநில அரசுகள் சம்பந்தப் பட்டது. மாநில அரசு கேட்டுக் கொள்ளாத நிலையில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்