விவசாயிகள் தற்கொலை, மரணத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாதது வேதனைக்குரியது: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக் குரியது, வெட்ககரமானது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளரு மான மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48 லட்சத்து 55 ஆயிரம் செலவில் அமைக்கப் படவுள்ள மழைநீர் வடிகால் அமைக் கும் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

கொளத்தூர் தொகுதியில் உள்ள வரதராஜன் தெரு, வெற்றிநகர் பிரிவு, குமரன் நகர் 3-வது தெரு வழியாக தணிகாசலம் நகர் 80 அடி சாலை வரை மழைநீர் வடிகால் அமைக்க எனது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48 லட்சத்து 55 ஆயிரம் ஒதுக்கியுள்ளேன். இன்று தொடங்கிவைத்துள்ள இப்பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வார்தா புயலால் பல்லாயிரக் கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், உட்புறச் சாலைகள், தெருக்களில் மரங்கள் இன்னமும் முழுமையாக அப்புறப்படுத் தப்படவில்லை. அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

வெட்டப்பட்ட மரங்களை மாநகராட்சி விளையாட்டுத் திடல் களில் போட்டு வைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத் திடலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆங்காங்கே மரங்கள் குப்பைபோல குவிக்கப் பட்டுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விளையாட்டுத் திடல் களில் இருந்து மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறட்சி, அரசின் அலட்சியம் ஆகியவற்றால் விவ சாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் ஆகியவை தொடர்கின் றன. ஆனால், அவர்களது குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறவோ, இழப்பீடு வழங்கவோ அரசு முன்வரவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வும் முயற்சிக்கவில்லை. சட்டப் பேரவை, மக்கள் மன்றத்தில் இதுகுறித்து நான் பலமுறை பேசியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் வலியுறுத்தியும் பலனில்லை. இவற்றையெல்லாம் அதிமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது, வெட்ககர மானது, கண்டிக்கத்தக்கது.

தலைமைச் செயலாளர் வீட்டி லும், தலைமைச் செயலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறாமல் மவுனம் சாதிக் கிறார். இதுகுறித்து பத்திரிகை யாளர்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவில் சந்தேகம் இருப்ப தாக உயர் நீதிமன்ற நீதிபதியே கருத்து தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்தும் முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்