திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியது: பக்தர்களிடையே பரபரப்பு

By செய்திப்பிரிவு

திருச்செந்தூரில் நேற்று காலை கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலையொட்டிய கடல் பகுதி நேற்று காலை திடீரென சுமார் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருக்கும் பாறைகள், புல்வெளிகள் வெளியே தெரிந்தன.

நேற்று பங்குனி உத்திரம் என்ப தால் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராட திரண்டனர். கடல் உள்வாங்கியதை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்து கடலுக்குள் இறங்கவே அஞ்சினர். ஆனால், இது வழக்கமான நிகழ்வு தான் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை தொடர்ந்து, அச்சம் தணிந்து அவர்கள் கடலுக்குள் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர்.

அமாவாசை மற்றும் பவுர்ண மிக்கு ஓரிரு நாட்கள் முன்பா கவோ அல்லது பின்னரோ திருச் செந்தூர் பகுதியில் கடல் உள்வாங்குவதும், சீற்றத்துடன் முன்னேறுவதும் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி பவுர்ணமி தினம் வந்த நிலையில், 14-ம் தேதி கடல் உள்வாங்கி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று பவுர்ணமி என்பதால், இதன் எதிரொலியாக நேற்று கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

8 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்