இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய முறைப்படியே தேர்வு: அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார்.

வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுகிறது.

அதன்படி, ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைந்துவிடும். பிளஸ் 1 பொதுத்தேர்வு, அதைத் தொடர்ந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவை 600 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த இரு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் பிளஸ் 2 இறுதி தேர்வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும்.

பிளஸ் 1 வகுப்புக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு அமைந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது:

''இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்கள் பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு பிளஸ் 1 சேர்ந்துவிட்டு அடுத்த ஆண்டு பிளஸ் 2 செல்ல இருக்கிற மாணவர்களுக்குத்தான் புதிய தேர்வுமுறையின்படி 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும்.

அவர்களுக்கு பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் (ஒவ்வொன்றுக்கும் தலா 600 மதிப்பெண்) ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்'' என்று வசுந்தராதேவி கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

ஓடிடி களம்

37 mins ago

க்ரைம்

55 mins ago

ஜோதிடம்

53 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்