ரோஹித் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி, வைகோ, இளங்கோவன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தலித் மாணவர் ரோஹித் தற் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் உறுப்பினராக இருந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்புக்கும் ஏபிவிபி மாணவர் அமைப்புக்கும் கடந்த ஆகஸ்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரோஹித் உட்பட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

ரோஹித்தின் தற்கொலைக்கு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணைவேந்தர் அப்பா ராவ் ஆகியோர் காரணம் என மாணவர்கள் கூறுகின்றனர். இவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு இந்துத்துவ சக்திகளே காரணம்.

வைகோ:

இந்துத்துவ சக்திகளின் தலித் விரோதப் போக்கால் தனது எதிர்காலம் கேள்விக்குறியானதால் மாணவர் ரோகித் வெமுலா மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணியின் மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இளங்கோவன்:

மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. பாஜக சார்பு மாணவர் அமைப் பான ஏபிவிபி மாணவர்களுக்கும் ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பின் மாணவர்களுக்கும் இடையே கடந்த ஆகஸ்டில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டு கோளின்படி ரோஹித் உட்பட 5 மாண வர்கள் மீது பல்கலைக்கழகம் நட வடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக் கழகம் மற்றும் விடுதியில் இருந்து இந்த 5 மாணவர்களும் பலவந்தமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். இதன் காரணமாகவே ரோஹித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணைவேந்தர் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நாடு விடுதலை அடைந்து 65 ஆண்டு களாகியும் ஜாதி ரீதியான அடக்குமுறை கள் தொடர்வது வேதனை அளிக் கிறது. இதற்கு எதிராக சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு பொறுப்பேற்று மத்திய அமைச் சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் பி.வி.தமிழ்ச்செல்வன், இமையா கக்கன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி செல்வப்பெருந்தகை உட்பட 100 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்