தொகுதி மக்கள் கருத்தறிந்து முடிவு: மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

மயிலாப்பூர் தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பென் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது புகார் தெரிவித்து பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதையடுத்து, அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமப் பகுதியில் உள்ள 'கோல்டன் பே' என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நான் மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில்தான் உள்ளேன். தொகுதி மக்கள் வந்து பார்க்கலாம் என்று நட்ராஜ் கூறியுள்ளார்.

மேலும், மக்களிடம் கருத்து கேட்டுவிட்டு, அவர்களுக்கு தெரியுமாறு, தொகுதிக்கு எது நல்லது என்பதை மனதில் வைத்து தான் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் இன்று ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் எனது மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் தான் உள்ளேன். யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். சமூக வலைதளங்களில் சொல்வது போல நான் வேறெங்கும் இல்லை. நான் முதலில் மக்களின் சேவகனே. ஜெயலலிதாதான் எனது தலைவர். எனது விசுவாசம் எப்போதும் அவருக்காகத் தான் இருக்கும்.

மக்களின் வரிப்பணமே எனது சம்பளம். எனவே எப்போதும் மக்கள் சேவையிலிருந்து விடுப்பு எடுக்கக் கூடாது என எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். வசைபொழியும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கிறேன். எனக்கு மட்டுமில்லை என்னைச் சுற்றி பலருக்கும் பல வேலைகள் உள்ளன.

இன்றைய அரசியல் சூழலில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் முடிவெடுத்தால் அதற்கு உகந்த காரணமும், நியாயமு இருக்கும்.

3 லட்சம் மயிலாப்பூர் தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனக்கு பொறுப்பிருக்கிறது. மக்களிடம் கேட்டுவிட்டு, அவர்களுக்கு தெரியுமாறு, தொகுதிக்கு எது நல்லது என்பதை மனதில் வைத்து தான் முடிவெடுப்பேன்.

நான் அற்பமான, ஓட்டுக்கான அரசியலை வைத்து விளையாட இங்கில்லை. மேலும் தொடர்ந்து இரண்டாவது முறை பதவி வகிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை'' என்று நட்ராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

13 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்