இந்தியாவில் முக்கிய ஆவணங்களாக இருப்பவை கல்வெட்டுகள்: ஆவணப்பட தேசிய கருத்தரங்கில் ஆர்.நல்லகண்ணு கருத்து

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இன்று நமக்கு முக்கிய ஆவணங்களாக இருப்பவை கல் வெட்டுகள். இந்தக் கல்வெட்டுகளில் 60 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந் தவை என ஆவணப்படம் குறித்த தேசிய ஆய்வரங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.

‘ஒலிவியம் படைப்பகம்’ என்ற தன்னார்வ அமைப்பு, சென்னை பல் கலைக்கழகம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து ‘ஆவணப்படம் அவசரம் அவசியம்’ என்ற தலைப்பில் நடத்திய தேசிய ஆய்வரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் கள், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணித் தமிழ் எழுத் தாளர்கள், சீனு ராமசாமி, சி.வி.குமார் உள்ளிட்ட முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், பாமயன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் என 20-க்கும் அதிகமான ஆளுமை கள் கலந்துகொண்டனர்.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, படத்தொகுப்பாளர் லெனின், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற் றிய ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரி யர் கே.அசோகன், “138 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘தி இந்து’ நிறுவனம் இந்திய வரலாற்றையும், உலக வர லாற்றையும் ஆவணப்படுத்தி வைத் துள்ளது. வரலாற்று, இலக்கிய நிகழ்வு களை பதிவு செய்ய ஆவணப்படம் தேவைப்படுகிறது. எனவே, மாணவர் கள் ஆவணப்படங்களை ஆர்வத் துடன் எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “தமிழ்நாட்டில் உ.வே சாமிநாதய்யர் இல்லாமல் போயிருந்தால் ஐம் பெரும் காப்பியங்கள் உள்ளிட்ட காப்பியங்கள் உலகுக்குக் கிடைக் காமல் போயிருக்கும். அதுபோல இந் தியாவில் இன்று நமக்கு முக்கிய ஆவணங்களாக இருப்பவை கல் வெட்டுகள். இந்தக் கல்வெட்டுகளில் 60 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந் தவை. ஆனால் இந்தக் கல்வெட்டுகள் இருப்பதோ பெங்களூருவில். அவற் றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த ஆவணங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல. இது போன்ற ஆவணங்களைப் பாதுகாக்கும் தனி மனிதர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

திரைப்பட இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “எங்களுடைய ‘திருப் பதி பிரதர்ஸ்’ வெளியிடும் திரைப் படங்களுக்கு இடையே ஆவணப் படங்களை சேர்த்து திரையிட தயா ராக உள்ளோம். அதேபோல், நல்லக் கண்ணு, லெனின் ஆகியோர் பற்றி ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் அதற்கும் உதவி செய்ய தயாராக உள்ளேன்” என்றார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, “ஆவணப்படுத்து தல் என்பது தமிழர்களின் வாழ்க்கை யிலேயே கிடையாது. ஊரு டைய வரலாறு, உணவின் வரலாறு என எந்தவொரு தகவலை யும் ஆவணப்படுத்தாமல் வாய்மொழி யாகவே நாம் அறிந்த வரலாறு. தமி ழில் ஒரு முக்கியமான ஆவணப் படக் கலைஞராக திகழ்கிறார் ஏ.கே. செட்டியார். அவர் காந்தியடிகளைப் பற்றி ஆவணப்படம் எடுத்தார். இதற் காக உலகம் முழுவதும் சுற்றி தகவல் களை சேகரித்தார். ஆனால், இத்திரைப்படத்தின் மூலஆவணம் நம்மிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “இன்று வெகுஜன சினிமா எடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம் என்பதை ஆவணப் படமாக எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், வாழ் வியல் சினிமாவை எடுக்க வேண்டு மெனில் வாழ்வியல் களத்துக்குச் சென்று பதிவு செய்ய முடியாது. இந்த ஆய்வரங்கம் மூலம் கூட்ட மைப்பு ஏற்படுத்த வேண்டும். அதில் அடிப்படை உறுப்பினராக நான் சேர்வேன். பின்னர் அது இயக்கமாக, ஒரு பேரியக்கமாக உருவாக வேண்டும்” என்றார்.

‘ஒலிவியம்’ அமைப்பின் நிறுவனர் களான சாரோன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விழாவில் சிறந்த ஆவணப்பட சேகரிப்பாள ருக்கான விருது திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணனுக்கு வழங் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்