சசிகலாவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந் தார். ஜெயலலிதா மரணத்தில் வி.கே.சசிகலா தரப்பினர் மீது சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே ஆயிரம் விளக்கு போலீ ஸில் புகார் கொடுத்துள்ளேன். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று பல்வேறு பிரச்சினைகளில் சுமூக தீர்வு கண்டுள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் வி.கே.சசி கலாவை முதல்வராகக் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகின்ற னர். தற்போது சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக் கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்ற மேல்முறை யீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதில் குற்றம் சுமத்தப்பட்டவர் முதல்வராக பதவியேற்கக்கூடாது. ஆனால் ஆளுங்கட்சியினர் வி.கே.சசிகலாவை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்துள்ளதால். எந்நேரமும் அவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் முதல்வராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது. அதுவரை பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டுமென தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளேன்.

விசாரணை தள்ளிவைப்பு

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை வரும் பிப்.16-க்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்