திருச்சியில் அரசினர் கூர்நோக்கு இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: கண்காணிப்பாளர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

திருச்சியில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுமிகளுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்ததாக இல்ல கண்காணிப்பாளர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, கீழரண் சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள் ளது. இங்கு 8 சிறுமிகள், உள் ளிட்ட 25 பேர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். குழந்தைத் திரு மணத்தின் போது மீட்கப்பட்ட சிறுமி ஒருவரும் இங்கிருந்தார். அவர் மீண்டும் படிக்க விரும்பு வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை இல்லத்திலிருந்து விடு வித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கு பள்ளியிலிருந்து உரிய சான்றிதழ்களைப் பெற்று வந்த பெற்றோரிடம், அவற்றை சரிபார்த்து விட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் எஸ்.இந்திராகாந்தி மற்றும் உறுப்பி னர்கள் கூர் நோக்கு இல்லத்துக்கு அக்.14-ம் தேதி சென்றுள்ளனர். அப்போது, அந்த சிறுமி, கூர்நோக்கு இல்ல கண்காணிப் பாளர் பிரபாகரன் இங்குள்ள சிறுமி களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக அவர்களிடம் புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, குழந்தை கள் நலக்குழுவின் தலைவர் இந்திராகாந்தி மற்றும் குழு உறுப்பினர்கள் கூர்நோக்கு இல்லத்துக்குச் சென்று அங்கு தங்கியுள்ள சிறுமிகளிடம் விசாரித் தனர். அதில் 16 முதல் 17 வயதுடைய இரு சிறுமிகள், பிரபாகரன் தொடர்பாக தெரிவித்த தகவல்கள் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்ய திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு குழந்தை கள் நலக்குழுத் தலைவர் இந்திராகாந்தி உத்தரவிட்டார். ஆனால், போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெய முரளிதரன் மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமாரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, வியாழக் கிழமை பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்...

இதற்கிடையே தலைமறை வான பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து சமூகப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

51 mins ago

சுற்றுச்சூழல்

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்