இலங்கையிலுள்ள இந்திய தூதர அதிகாரிகள் அலட்சியம்: தமிழகம் திரும்பிய மீனவர்கள் குற்றச்சாட்டு

By ராமேஸ்வரம் ராஃபி

இலங்கை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மண்டபம் கடற்படை தளத்திற்கு செவ்வாய்கிழமை மாலை வந்தடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 2 அன்று நெடுந்தீவு மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்பு சேகரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்தது. படகை சரி செய்ய முயன்றும் இயலாமல் போனதால் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் இருந்து குதித்து அருகே இருந்த நெடுந்தீவில் கரை ஏறினர். பின்னர் மீனவர்கள் 4 பேரும் நெடுந்தீவு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த மீனவர்களை யாழ்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தி யாழ்பாணச் சிறையில் அடைத்தனர். நவம்பர் 6 அன்று மீண்டும் 4 ராமேஸ்வரம் மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திர ராஜா 4 மீனவர்களையும், விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க உத்திரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் தலைமன்னார் இலங்கை கடற்படை தளத்திலிருந்து கிளம்பினர். மதியம் 2 மணியளவில் இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் சர்வதேச நீர்பரப்பில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கிறிஸ்து, முத்துச்சாமி, ரகு, முருகன் ஆகிய நான்கு ராமேஸ்வரம் மீனவர்களும் பின்னர் மண்டபம் கடற்படை தளத்திற்கு செவ்வாய்கிழமை மாலை வந்தடைந்தனர்.

தாயகம் வந்த மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை, அக்டோபர் 4 அன்று நாங்கள் நெடுந்தீவு காவல்துறையினரிடம் படகு பழுதடைந்து விட்டது என கூறி சரணடைந்ததோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை பார்ப்பதற்கு தாமதப்படுத்தினர். மேலும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எங்களை சந்தித்தபோது, உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே கெடையாதா? எங்கள் உயிரை எடுப்பதே உங்கள் வேலையாகிப் போச்சு என்றும் திட்டினர்.

இந்திய தூதரக அதிகாரிகள் மட்டும் காலதாமதமின்றி எங்களை சந்தித்து போதுமான ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் சரணடைந்த மறுநாளே தாயகம் திரும்பியிருப்போம். 32 நாட்கள் சிறையில் இருந்திருக்க மாட்டோம். தற்போது எங்களுடைய விசைப்படகு நெடுந்தீவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய ரூ. 2 லட்சம் வரையிலும் செலவாகும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

56 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்