பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிப்பு அதிகாரம்: மாநில அரசுகளிடமே நீடிக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே நீடிக்க வேண்டும் என்று டெல்லியில் மாநிலங்களவை தேர்வுக் குழுவிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக திராவிடர் கழ கம் வெளியிட்டுள்ள செய்தி:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 123-வது திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. பூபேந்தர் யாதவ் தலைமையிலான இக்குழுவில் கனிமொழி (திமுக), நவநீதகிருஷ்ணன் (அதிமுக), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி), பி.கே.ஹரிபிரசாத் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘‘பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் அதிகாரம் இது வரை மாநிலங்களிடமே உள்ளது. சமூக, கல்விரீதியாக பிற்படுத் தப்பட்டோரைக் கண்டறியும் பணியை மக்களுடன் நேரடி தொடர் பில் உள்ள மாநில அரசுகள் தான் செய்ய இயலும். எனவே, இந்த அதிகாரம் மாநில அரசு களிடமே நீடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்துக்கு இணையாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துக்கும் அரசியல் சட்ட அதிகாரம் வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

22 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்