தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: மீண்டும் பேரவைத் தலைவராகிறார் பி.தனபால் - துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ள பி.தனபால் இன்று நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பதவியேற்கிறார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்கிறார்.

தமிழகத்தில் 15-வது சட்டப்பேரவைக் கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை மே 23-ம் தேதி பதவியேற்றது. புதிய சட்டப்பேரவை கடந்த 25-ம் தேதி கூடியது. பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். பின்னர், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செம்மலை வெளியிட்டார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.

மனுதாக்கல் செய்தனர்

இதற்கிடையில், அதிமுக சார்பில் பேரவைத் தலைவர் வேட்பாளராக பி.தன பால், துணைத் தலைவர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப் பட்டனர். இருவரும் வேட்புமனுக்களை நேற்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய் தனர். அப்போது அமைச்சர்கள் திண் டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனி சாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தனர்.

பகல் 12 மணி வரை வேறுயாரும் மனுதாக்கல் செய்யாததால், சட்டப் பேரவை தலைவராக பி.தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெய ராமனும் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, பேரவைத் தலைவர் பதவி யேற்பு விழா நடக்கும். வழக்கமான நடை முறைப்படி, சட்டப்பேரவை தலைவராக பி.தனபால் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை தற்காலிக தலைவர் செம்மலை வெளியிடுவார். பேரவைத் தலைவர் தனபாலை, அவரது இருக்கை யில் அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வமும், பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் அமரவைப்பர். தொடர்ந்து, பேரவைத் துணைத் தலைவ ராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டதை பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பார். பிறகு, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசுவர். அவரது ஏற்புரைக்குப் பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும்.

இரண்டாவது முறை

14-வது சட்டப்பேரவையின் தலைவராக இருந்த டி.ஜெயக்குமார் 2012 செம்டம்பர் 29-ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணைத் தலைவராக இருந்த பி.தனபால் பேரவைத் தலைவரானார். பிறகு, துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்றார். அவர்கள் இருவரும் அதே பதவிகளுக்கு 2-வது முறையாக தேர்வாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்